நவராத்திரி ஒன்பதாம் நாள்: இன்று என்ன விசேஷம் ?
![நவராத்திரி ஒன்பதாம் நாள்: இன்று என்ன விசேஷம் ? நவராத்திரி ஒன்பதாம் நாள்: இன்று என்ன விசேஷம் ?](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/10/18/136475-01.2345.jpg?itok=aB5w4c4y)
நவராத்திரி விழாவின் இறுதி நாளான மகா நவமி, 9ம் நாள், கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் அம்மனின் தினமாகும். இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி விழாவின் இறுதி நாளான மகா நவமி, 9ம் நாள், கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் அம்மனின் தினமாகும். இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது.
முப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரியின் 9 நாட்களும் வழிபடுவதுடன், ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய நைவேத்தியங்களையும் இங்கே பார்க்கலாம்.
நவராத்திரி ஒன்பதாம் நாள் பூஜை :-
தேவி : சாமுண்டா தேவி
மலர் : தாமரை
நைவேத்தியம்: அக்காரவடிசல்
திதி : நவமி
கோலம் : வாசனை பொடிகளால் ஆயுதம் போல பத்ம கோலமிட வேண்டும்
ராகம் : வசந்தா ராகம்.
நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, வருகிற 19-ம் தேதி விஜயதசமி வரை 10 நாட்கள் நடக்கிறது. நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் ஓன்பது வகைகளில் படைக்க வேண்டும். நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள்.