கேரள மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. அந்த விழாவில் இடம்பெறும் புலியாட்டம் மிகவும் பிரபலம். அதனை பற்றி கொஞ்சம் தெரிந்துக் கொள்ளவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதன் புலி வேடம் இட்டு ஆடும் ஆட்டமே புலி ஆட்டம். ஓணம் விழாவில் இடம் பெரும் புலி ஆட்டம் "புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று கேரள மக்களால் அழைக்கப்படும். இந்த ஆட்டம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. இசையின் ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலிவேடமிட்டு ஆடுவர்.


களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர்கள். 


புலிக்களி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும்.