ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவிலில் பிரசித்திப் பெற்ற நிகழ்வான குண்டம் திருவிழா விழா நாளை மறுநாள் நடைப்பெறவுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா மிகவும் பிரபலாமானது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். மனிதர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செய்வதினைப் போல் கால்நடைகளும் இந்த நிகழ்வில் பங்கேற்க்கும்.


விழாவில் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் வேம்பு, ஊஞ்சல் மரத்துண்டுகளை கொண்டு தீக்குண்டம் வளர்க்கப்டும். பின்னர் படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அம்மனை அழைத்து வரம்கேட்கும் நிகழ்ச்சி நடைபெறும். அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சருகுமாரியம்மன் உற்சவ சுவாமி குண்டத்துக்கு அழைத்து வரப்படும். 


இந்த நிகழ்வினை தொடர்ந்து பக்தர்கள் தொடர்ந்து குண்டத்தில் இரங்குவர். ஆண்டுதோறும் இந்த வழக்கம் பின்பற்றப் பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் கலந்துக்கொள்வர்.


இந்நிலையில் இந்த திருவிழாவில் பங்கேற்பதற்கா கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் மாட்டு வண்டிகளில் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். எனவே பண்ணாரி அம்மன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.