நாளை தொடங்குகிறது ரம்ஜான் நோன்பு
ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்கலாம் என்று தமிழக தலைமை காஜியார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் தலைமை காஜியார் சலாவுதீன் முகமது அயூப் கூறியது:-
ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று. தமிழகத்தில் 26-ம் தேதியன்று பிறை தென்படவில்லை.
எனவே நாளை நோன்பு தொடங்கும். அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை இன்று முதல் தொடங்கும்.
ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து 5 வேளை தொழுகை செய்வார்கள். மாலையில் நோன்பு திறக்கப்படும். அதற்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நோன்பு இருக்கும் 27-ம் நாளை லைலத்துல்கத்ரு இரவாகவும், நோன்பின் கடைசி நாளை ரம்ஜான் பண்டிகையாகவும் இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். சென்னையில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஷஹர் என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.