Premature Ageing: ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றாவிட்டால் உங்களின் உடல் அதற்கான எதிர்வினையை உடனடியாக காட்ட தொடங்கும். அதில் முக்கியமான ஒன்று இளம் வயதிலேயே உங்களை சற்று வயதானவர் போல் தோற்றமளிக்கும் வகையில் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும்.
தவறான சில அன்றாட பழக்கவழக்கங்கள் உங்களை விரைவாக வயதான தோற்றத்திற்கு இட்டுச்செல்லும். அதனை கண்டறிந்து அந்த பழக்கவழக்கங்களை உங்களின் அன்றாடத்தில் இருந்து நீக்குவதே இதற்கு சிறந்த தீர்வாக அமையும். அதற்கு முன், இளம் வயதிலேயே வயதான தோற்றமளிப்பது என்றால் என்ன என்பதை சற்று விரிவாக காணலாம்.
விரைவாக வயதாவது
முன்கூட்டியே வயதாவது (Premature Ageing) என்பது உங்களின் வயது வேகமாக உயர்கிறது என அர்த்தம். வயதுக்கு ஏற்ற வகையில் இல்லா்மல் உடல் ரீதியிலும் சரி, மன ரீதியிலும் சரி விரைவாக முதர்ச்சியடைவதை இது குறிக்கிறது. இது 40 வயதுக்கும் குறைவானோரிடம் அதிகம் காண முடிகிறது. இது உடல் ஆரோக்கியத்தை மட்டும் மனநிலையை கெடுக்கும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். இதற்கு அன்றாட பழக்கவழக்கங்கள் மட்டும் காரணமில்லை. மரபணு ரீதியாகவும், சுற்றுப்புற சூழல் காரணமாகவும் கூட இது ஏற்படலாம். இருப்பினும், மோசமான வாழ்க்கைமுறை என்பது இதில் முக்கிய காரணமாகும்.
மேலும் படிக்க | Indian Railways... கூடுதலாக 10,000 ரயில்பெட்டிகள்... ரயில்வேயின் அதிரடி திட்டம்..!!
முன்கூட்டிய வயதாகும் தன்மைக்கான அறிகுறிகள் என்று பார்த்தால் தலைமுடி செம்பட்டை நிறத்தில் மாறுவது அல்லது தலைமுடி மெலிசாவது; மூட்டு பகுதிகளில் இருக்கம் அல்லது கடுமையான வலி; சருமம் வழக்கத்தை விட வறண்டும், மெலிதாகவும் தோற்றமளிப்பது ஆகியவற்றை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். உடற்சோர்வு, அறிவாற்றலான செயல்பாடுகள் குறைவது, எலும்பின் அடர்த்தி குறைவது, பார்வைக் கோளாறு ஏற்படுவதும் அறிகுறிகளாக கூறப்படுகிறது.
ஒழித்துக்கட்ட வேண்டிய 6 பழக்கவழக்கங்கள்
இவற்றில் இருந்து நீங்கள் விடுதலை பெற்று ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்றால் இந்த 6 அன்றாட பழக்கவழக்கங்களில் நீங்கள் மாற்றம் கொண்டு வரவேண்டும். இந்த பழக்கவழக்கங்களால்தான் இதுபோன்று முன்கூட்டியே வயதாகும் தன்மை ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க வேண்டும் என்றால் உடனடியாக அந்த பழக்கவழக்கங்களை நிறுத்தி அதற்கான மாற்றுவழிகளை தேட வேண்டும். அந்த வகையில், உங்கள் வாழ்வில் இருந்து ஒழித்துக்கட்ட வேண்டிய 6 பழக்கவழக்கங்கள் குறித்து இங்கு காணலாம்.
1. புகைப்பிடிப்பது: புகை தான் உடலில் நச்சுகள் சேர்வதை உண்டாக்கும். இதனால் சருமத்தின் செல்கள் பாதிக்கப்பட்டு அதன் நெகிழ்வு தன்மை குறைந்துவிடும். இதனால் தோல் சுருக்கம் ஏற்படும். எனவே, புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்.
2. அதிகமாக மது அருந்துதல்: மதுபானத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது என்பது சருமத்தில் நீர்ச்சத்து குறைபாட்டை உண்டாக்கும். இது கல்லீரலை பாதிக்கும். இது உடல்நிலையை பாதிக்கும், முன்கூட்டியே வயதாகும் தன்மையை கொண்டுவரும்.
3. தூக்கமின்மை: சரியான நேரத்தில் சரியான அளவில் நீங்கள் தூங்கவில்லை என்றால் பிரச்னைதான். இதே தினமும் நடந்தால் கூடுதல் பிரச்னையாகும். தூக்கத்தின் போதுதான் உடல் தன்னை தானே மீட்டெடுத்துக்கொண்டு புதிய சரும செல்களை மறுஉற்பத்தி செய்யும். போதிய தூக்கம் இல்லாதது இதில் தடையை ஏற்படுத்தும். தொடர்ந்து சரியாக தூங்கவில்லை என்றால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனம் அடையும். எனவே இரவு விரைவாக தூங்கி, காலையில் விரைவாக எழுந்திருங்கள்.
4. உடற்பயிற்சிகளை ஒதுக்குவது: போதிய அளவு உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு இல்லாதது பெரிய பிரச்னையாகும். உடற்பயிற்சிதான் உங்களின் இதய ஆரோக்கியத்தை வலிமையாக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கும். உடல் உழைப்பே இல்லாவிட்டால் அது இதயத்திற்கு ஆபத்து.
5. அதிக மன அழுத்தம்: தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு வயது விரைவாக முதிர்ச்சி ஏற்படும். உடலில் Cortisol எனப்படும் ஹார்மோன் அதிகம் சுரக்கும். இது சருமத்தில் பிரச்னையை உண்டாக்கும்.
6. ஆரோக்கியமற்ற உணவுமுறை: எப்போதும் உணவில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்புச் சத்து உள்ள உணவுகள் முன்கூட்டியே வயதாகும் தோற்றத்தை ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: Premature Ageing குறித்த இந்த செய்தி நீங்கள் அறிந்துகொள்வதற்காக எழுதப்பட்டது. இவை பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிசெய்யவில்லை)
மேலும் படிக்க | தண்ணீர் குடித்தே வெயிட்டை குறைத்த நபர்... 21 நாட்களுக்கு நீர் மட்டுமே ஆகாரம்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ