ரம்ஜான் நோன்பு இன்று தொடங்குகிறது!!
ரம்ஜான் நோன்பு இன்று முதல் தொடங்குகிறது. ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று.
ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து 5 வேளை தொழுகை செய்வார்கள். மாலையில் நோன்பு திறக்கப்படும்.
நோன்பு இருக்கும் 27-ம் நாளை லைலத்துல்கத்ரு இரவாகவும், நோன்பின் கடைசி நாளை ரம்ஜான் பண்டிகையாகவும் இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள்.
சென்னையில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஷஹர் என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இறுதியாக ஈகைத் திருநாளைக் கொண்டாடுவது வழக்கம்.