அயோத்தி ராமர் கோவிலில் ராவணனுக்கு சிலை வைக்கப்படுமா?
அயோத்தி ராமர் கோவிலில் ராவணனுக்கும் சிலை வைக்கவேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, சிலை அமைக்கும் செலவை நன்கொடையாக கொடுப்பதாகவும் கோரிக்கை
புதுடெல்லி: அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுவரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் சுமார் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இந்த சந்தர்பத்தில் அயோத்தி ராமர் கோவிலில் ராவணனுக்கும் சிலை வைக்கவேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் உருவாகும் ராமர் ஆலயத்தில் ராவணனுக்கும் (Ravanan) சிலை வைக்க வேண்டும் என்று மதுராவைச் சேர்ந்த ’லங்கேஷ் பக்த் மண்டல்’ (Lankesh Bhakt Mandal) என்ற ஒரு அமைப்பு கோரியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் லங்கேஷ் பகத் மண்டல் எழுதியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ராவணனின் சிலையை நிறுவுவதற்கான செலவை ’லங்கேஷ் பக்த் மண்டல்’ ஏற்கும் என்று அமைப்பின் தலைவர் ஓம்வீர் சரஸ்வத் தெரிவித்துள்ளார். ராவணனுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கடிதம் (Ram Janmabhoomi Tirath Kshetra Nyas) அமைப்புக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
Also Read | ராவணன் இறக்கும்போது உலகிற்கு கூறிய ஆழமான வார்த்தைகள்!
மிகவும் எதிர்பார்க்கப்படும் ராமர் கோவில் (Ram Temple), பல்வேறு தடைகளையும் தாண்டி தற்போது கட்டப்பட்டு வருகிறது. கோவில் கட்டுமானப் பணிகளுக்கு 1100 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்பவதாக ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா நியாஸ் (Ram Janmabhoomi Tirath Kshetra Nyas) அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் (Swami Govind Dev Giri Maharaj) கூறுகிறார்.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சிலை வைப்பது ராவணனுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலி என்று ஓம்வீர் சரஸ்வத் கூறிகிறார். இந்தியாவில் ஒரு பிரிவினர் ராவணன் வதம் செய்யப்பட்ட நாளான்று துக்கம் அனுசரிப்பதும் குறிப்பிடத்தக்கது.
இராமாயணத்தில் வரும் இராவணன், இலங்கையிலிருந்து (Srilanka) இந்தியா செல்லவும், அங்கிருந்து திரும்பி வரவும் 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக, விமானத்தை பயன்படுத்தியதாக இலங்கை அரசு கூறுகிறது. இதை ஆவணப்படுத்த வதற்காக, இலக்கியங்கள் மற்றும் பிற வகையில் கிடைக்கும் தகவல்களை வழங்கி பொதுமக்கள் உதவ வேண்டும் என்று இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகம் விளம்பரம் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR