சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திகை மாதம் பிறந்துள்ளதை முன்னிட்டு இன்று கோவில்களில் ஐயப்ப பக்தர்கள் சரணகோஷம் முழங்கினர். இன்று ஐயப்பன், முருகன் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். கார்த்திகை தொடங்கி தை மாதம் வரை கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலையில் மண்டல பூஜைகள் நடைபெறும். கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம் ஆகும்.


இதனையொட்டி நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். 


இன்று முதல் ஐயப்ப கோவில்களில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 
கார்த்திகை முதல் தேதியான இன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை அணிந்து கொண்டனர். 


ஐயப்ப பக்தர்கள், துளசி மணிமாலை மற்றும் கருப்பு, நீலம், காவி வேஷ்டி அணிந்து தினமும் காலை மற்றும் மாலையில் நீராடி, ஐயப்பனை வணங்கி பூஜைகள் செய்வர். இன்று முதல் 48 நாட்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து ஐயப்பனையோ, முருகனையோ வணங்குவார்கள்.