சேலம்: தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழமை வாய்ந்த தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துக்கொள்ள தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை எட்டுகால பூஜை பக்தர்கள் கலந்துக்கொண்டு இறை ஆசி பெற்றனர்.


இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 


90 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்திற்கு காலை 9.30 மணியளவில் புனித நீர் ஊற்றி, வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் கோவிலைச் சுற்றிலும் மலர் தூவப்பட்டது.


பக்தர்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் கோவில் வளாகத்தினை சுற்றி நிறுத்தப்பட்டனர். சிறப்பு மருத்துவ முகாம்களும், தீயனைப்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர்!