விருச்சிகம், தனுசு, மகரம் ராசிகள் ஏழரை சனியை கடக்க பரிகாரம்!
ஏழரைச் சனி என்பது ஒரு ராசியிலும் அதற்கு முந்தைய ராசியிலும், பிந்தைய ராசியிலும், சனி சஞ்சரிக்கும் காலம் ஆகும்.
ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு கிரகம் இடம் பெயர்தலை தான் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.
சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால், ஒவ்வொரு ராசியில் இருந்து இடம் பெறுவதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதைத் தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம். இந்த சனிபெயர்ச்சி தற்போது விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு நிகழ இருக்கிறது. ஏழரைச் சனி என்பது ஒரு ராசியிலும் அதற்கு முந்தைய ராசியிலும், பிந்தைய ராசியிலும், சனி சஞ்சரிக்கும் காலம் ஆகும். அதாவது, முந்தைய ராசியில் 2.5 வருடம், அந்த ராசியில் 2.5 வருடம், பிந்தைய ராசியில் 2.5 வருடம், ஆக மொத்தம் 7.5 வருட காலத்தை ஏழரைச் சனி என அழைக்கிறார்கள்.
விருச்சிகம்
இதுவரை உங்களது ராசியில் இருக்கும் சனி பகவான் விலகி தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
விசாகம் 4ம் பாதம்:
அனுபவ அறிவால் வெற்றியடைவீர்கள். பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.
அனுஷம்:
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது.
கேட்டை:
காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாட்களாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.
சிறப்பு பரிகாரம்: செவ்வரளி மாலையை அருகிலிருக்கும் செவ்வாய்கிழமை தோறும் அம்மன் கோவிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீம் துர்க்காயை நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
தனுசு
இதுவரை உங்களது அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி ராசிக்கு வருகிறார். மூன்றாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
மூலம்:
எதிரியை தகுந்த நேரம் பார்த்து வெற்றி கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
பூராடம்:
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும்.
உத்திராடம் 1ம் பாதம்:
புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை. பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.
பரிகாரம்: ராகுகேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.
சிறப்பு பரிகாரம்: வியாழக்கிழமை தோறூம் தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் சத்குருவே நம” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும்.
மகரம்
இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி அயன சயன போக ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் ரண ருண ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
தலைமை தாங்கி துணிச்சலுடன் எதையும் செய்வீர்கள். செலவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. வீண் தகராறு ஏற்படலாம். செலவை குறைப்பதன் மூலம் பணத்தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும்.
திருவோணம்:
பணிபுரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்தபாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.
அவிட்டம் 1,2 பாதம்:
மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். கலைத்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சனை தீரும். இதுவரை இருந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. மாணவர்களுக்கு மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும்.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
சிறப்பு பரிகாரம்: அருகம்புல்லை அருகிலிருக்கும் சாத்தி விநாயகருக்கு வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீம்கணபதயே நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
வழங்கியவர் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் (@ramjothidar)
தொடர்புக்கு:-
Facebook https://www.facebook.com/ramakrishnan.josiyar?fref=search
Twitter https://twitter.com/ramjothidar?lang=en
Blog http://kuppuastro.blogspot.in/
Website http://www.kuppuastro.com/