முதல் முறையாக திருச்சி உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு யுனெஸ்கோ அமைப்பு விருது அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)ஆகும்.  


ரூ.25 கோடியில் கடந்த 2015-ம் ஆண்டு பழமை மாறாமல் ஸ்ரீரங்கம் கோயில் புதுப்பிக்கப்பட்டது. இரண்டு கட்டங்களாக மகா சம்ரோக்ஷணம் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிப்பதால், யுனெஸ்கோ அமைப்பு விருதுக்கு ஸ்ரீரங்கம் கோயில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


ஸ்ரீரங்கம் கோயில் 600 ஏக்கர் பரப்பளவில் 21 கோபுரங்களால் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன் விளங்குகின்றது.