தை அமாவாசையை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம்
அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்பணம் அளிப்பது காலம் காலமாக கடைபிடிக்கும் வழக்கம். அதுவும் ஆடி, புரட்டாசி, தை அமாவாசை காலங்களில் முன்னோர்களுக்கு புனித நீர் நிலைகளில் நீராடி தர்பணம் கொடுப்பது ஐதீகம்.
இந்துக்கள் இறந்து போன தங்கள் முன்னோர்கள் நினைவாக அமாவாசை தினங்களில் நாடு முழுவதிலும் உள்ள ஆறுகள், அருவிகள், கடல்களில் புனித நீராடுவது வழக்கம். தை அமாவாசை தினமான இன்று புனித தலங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபடுவார்கள்.
இன்று கடைபிடிக்கப்படும் அமாவாசையானது உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என குறிப்பிடப்படுகிறது.
காவிரியில் தண்ணீர் இன்றி வறண்டுள்ளதால் குழாய்கள் மூலம் புனித நீராடிய பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்பணம் அளித்தனர். தை அமாவாசையையொட்டி புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்.
ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே அந்த ஆண்டு முழுவதும் அவர்கள் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது முன்னோர் வாக்கு.
தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து அவர்களின் ஆசி பெறுவோம்.