திருப்பதி கோவிலில் VIP தரிசனம் இல்லை; அதிரடி அறிவிப்பு!
வரும் அக்டோபர் 17-ஆம் நாள் வரை திருப்பிதி கோவிலில் VIP தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது!
வரும் அக்டோபர் 17-ஆம் நாள் வரை திருப்பிதி கோவிலில் VIP தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது!
பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எந்நாளும் கூட்டம் அதிகளவில் காணப்படும். குறிப்பாக சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமாகவே கூட்டம் காணப்படும். நாள் ஒன்றுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் கடந்த சில தினங்களாக திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், காலாண்டுத் தேர்வு விடுமுறைகள் வரும் நிலையில் திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டத்தை கட்டுப்படுத்த வரும் அக்டோபர் 17-ஆம் நாள் வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் VIP தரிசனம் ரத்து செய்யபட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேற்பட்ட தேதிகளை அடுத்த தரிசனம் வழக்கம்போல் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது!