இருமல், சளி மற்றும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் திருப்பதி சாமியை தரிசனம் செய்ய வர வேண்டாம்
கொரோனா அறிகுறி யாருக்காவது இருந்தால், தயவுசெய்து அவர்கள் சாமியை தர்சனம் செய்ய வரவேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தான வேண்டுகோள் வைத்துள்ளது.
திருப்பதி: கொரோனா அறிகுறி யாருக்காவது இருந்தால், தயவுசெய்து அவர்கள் சாமியை தர்சனம் செய்ய வரவேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தான வேண்டுகோள் வைத்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் (டி.டி.டி) கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்ப்பதற்காக பக்தர்கள் இருமல், சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்படுகிறார்களானால் அவர்கள் புனித யாத்திரையை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அறுக்கையில், பக்தர்கள் இருமல், சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்படுகிறார்களானால் அவர்களின் யாத்திரையைத் தவிர்க்க அல்லது ஒத்திவைக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். இது தவிர, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை நெரிசலான இடங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களை அந்த பகுதியில் கிருமிநாசினியை தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணியை சுகாதாரத் துறை மேற்கொள்ளும்.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லேசான காய்ச்சலால் பாதிக்கப்படுவதைக் கண்டால், அவர்களை உடனடியாக பரிசோதனை செய்யப்படும். எந்தவொரு நேர்மறையான அறிகுறியும் உள்ள நபர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (எஸ்.வி.எம்.எஸ்) அனுப்பப்படுவார்கள்.
கை கழுவதற்கும் தேவையானவை மற்றும் முகமூடிகளை எடுத்துச் வருமாறு பக்தர்களிடம் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் தொற்று பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் மூன்று அடி தூரத்தையும் பராமரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.