வரும் 26 ஆம் தேதி நிகழவிருக்கும் சூரிய கிரகணம் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் சூரியன், சந்திரன், கேது, குரு, சனி, புதன் முதலான ஆறு கிரகங்களின் சேர்க்கை நடக்கவிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென் தமிழகத்தில் 23 வருடங்களுக்கு பிறகு நெருப்பு வளையம் போன்று தோன்றும் முழு சூரிய கிரகணம் தெரியவுள்ளது.


நெருப்பு வளைய சூரிய கிரகணமானது கேரளாவில் தொடங்கி தமிழகத்தின் 10 மாவட்டங்களில் முழுமையாக பார்க்க முடியும். மற்ற பகுதிகளில் பகுதி சூரிய கிரணகன காட்சியை காணலாம்.


சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியன் மறைக்கப்படும். அதாவது நிலவின் நிழல், பூமியின் மீது விழும். இது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே, சூரியனை நிலவு முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்று கூறப்படுகிறது.


இந்த சூரியகிரகணமானது காலை 8:00 மணி முதல் 11:16 மணி வரை 97.3 சதவீதம் முழுமையாக சூரியனை மறைக்கிறது. அன்றைய தினத்தில் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் சூரியன், சந்திரன், கேது, குரு, சனி, புதன் முதலான ஆறு கிரகங்களின் சேர்க்கை நடக்கவிருக்கிறது. ராகுவின் பார்வையில் இந்த ஆறு கிரகங்களும் நீள்வட்டப்பாதையில் இயங்க இருப்பதால் இந்த கிரக சேர்க்கையின் தாக்கம் பூமியின் மீது விழப்போகிறது.


சூரிய கிரகணத்தின் தாக்கத்தினால் தோஷம் ஏற்படக்கூடியகேட்டை, மூலம், பூராடம், மகம், அஸ்வினி இந்த ஐந்து நட்சத்திரக்காரர்களும் கிரகணத்தன்று பரிகாரம் செய்யவேண்டிய நட்சத்திரங்களாகும்.


இந்த சூரிய கிரகணத்தை குறிப்பாக கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் பார்க்க முடியும். மற்ற இடங்களில் பகுதி சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.