ரூபாய் 1000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் அளிக்கும் திட்டம் விரைவில் திருப்பதியில் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திரா மாநிலம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசன முறை சமீபத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வழி விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி அறிவித்து இருந்தார். இதனையடுத்து தற்போது ரூபாய் 1000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் அளிக்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிகிறது.


இந்த திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் துவங்கி வைப்பார் எனுவும் கூறப்படுகிறது.


நாடு முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்களை அமைத்து வருகிறது புதிதாக துவங்கப்பட்ட ஸ்ரீவாணி டிரஸ்ட். The Sri Venkateswara Alaya Nirmanam trust (Srivani trust) இந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் என்பது தான் இந்த புதிய முறை. 


சாமானிய பக்தர்களின் மீது கவனம் செலுத்துவதற்காகவும், ஸ்ரீவாணி டிரஸ்ட் நன்கொடையை அதிகரிக்க செய்யவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.