கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் தேவலோக மரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பாற்கடலைக் கடையும் பொழுது வந்த இந்த மரங்களை இந்திரன் தேவலோகத்திற்கு உரியகாக எடுத்துக் கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிலத்தில் விழுந்தாலும் குப்பையில் போடாமல், இறைவனுக்குச் சூட்டப்படும் ஒரே ஒரு மலர் பாரிஜாதம் மட்டும் தான். இப் பூக்களை மரத்திலிருந்து கொய்து இறைவனுக்குச் சூட்டக் கூடாது .
இனிய மணம் வீசும் தன்மை கொண்ட பவளமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம் என்று தெரியுமா? . 


பரிஜாதப் பூ முன்னிரவில் பூத்து மணம் வீசி சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும் தன்மை கொண்டது. பவளமல்லி உள்ள மூன்று இலை தொகுப்புகளில் மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம். மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பப்படுகிறது.


Also Read | கோயிலில் உள்ள கொடிமரத்தால் பக்தர்களுக்கு என்ன நன்மை?


பாரிஜாதம் என்ற பவளமல்லி, திருமாலுக்கு உகந்தது.  பவளமல்லி வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் குடியிருக்கிறார்.


பல ஆலயங்களில் பவளமல்லி, தலவிருட்சம் என்பது தெரியுமா? தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடு துறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திருவைகுண்டத்தில் உள்ள கண்ணபிரான், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவளமல்லி தலவிருட்சமாக போற்றப்படுகின்றன.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR