உலகை காத்து ரட்சிக்கும் அன்னையை அனுதினமும் பூஜித்தாலும், நவராத்திரியில் வழிபடுவது மிகவும் சிறப்பானது. ஆண்டுக்கு நான்கு முறை நவராத்திரி வருகின்றன. அவற்றில், சாரதா நவராத்திரி, மற்றும் சியாமளா நவராத்திரியே பரவலாக கொண்டாடப்படுகின்றன. குளிர்கால தொடக்கத்தில் வருவது சாரதா நவராத்திரி, வசந்த கால தொடக்கத்தில் வருவது சியாமளா நவராத்திரி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அம்பிகைக்குரிய நவராத்திரியில் அம்பிகையை வழிபடுவது சிறப்பு. அகிலத்தை காத்து ரட்சிக்கும் அன்னையை வணங்கி, பெண்களுக்கு தாம்பூலம் தருவது மிகவும் சிறப்பானது.  


‘தாம்பூலம்’ கொடுப்பதற்கான காரணம் என்ன? வெற்றிலை அன்னையின் அம்சம் என்பதால், எந்தவொரு நல்ல காரியத்திலும் வெற்றிலைக்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நவராத்திரியில் தாம்பூலம் கொடுக்கப்படுவதற்கும் காரணங்கள் இருக்கின்றன.


Also Read | வசந்த பஞ்சமி: இந்த வகையில் சரஸ்வதி பூஜை செய்தால் அறிவாற்றல் அதிகரிக்கும், கலைகள் பெருகும்


தானங்கள் செய்யும் போதும் வெற்றிலை, பாக்கையும் சேர்த்து தருவதே நம் சம்பிரதாயம். வெற்றிலையில் முப்பெரும் தேவியரும் வாசம் செய்கின்றனர். அனைத்து உயிர்களிடத்தும், அன்பு, கருணை, ஈகை, முதலிய குணங்களை உலகில் நிலைத்திருக்கச் செய்ய உருவாக்கப்பட்டது பிறருக்கு அன்னமிடுதல் என்ற மானுடக் கடமை.


முன்பின் தெரியாத யாரவது பசி என்று வந்தால் உணவளிப்பது மாபெரும் பாக்கியம். சுமங்கலி பெண்கள் விருந்தினராக இருக்கும்போது அவர்களுக்கு கட்டாயம் தாம்பூலம் தர வேண்டும். வெற்றிலை சத்தியத்தின் சொரூபமாகும். அதனால்தான் திருமண நிச்சாயத்தார்த்தின் போது, வார்த்தைகளை உறுதி செய்துக் கொள்ளும் விதமாக வெற்றிலை பாக்கை மாற்றிக்கொள்கின்றனர்.


ALSO READ: சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? அல்லது ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க வேண்டுமா?


நவராத்திரி கொலுவிற்கு வருவோருக்கு வழங்கப்படும் தாம்பூலத்தில் மங்கள பொருட்களாக கருதப்படும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, முகம்பார்க்கும் கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தேங்காய், பழங்கள், பூக்கள், மருதாணி, கண் மை, ரூபாய் நாணயம் என பெண்கள் பயன்படுத்தும் பொருட்களை கொடுப்பார்கள்.
மற்ற எந்த பொருளும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால், வெற்றிலையும் பாக்கும் தான் தாம்பூலத்தில் மிக முக்கியமானது.  


மஞ்சள், குங்குமம், ஆகிய மங்களப் பொருட்கள் சுமங்கலித் தன்மையை குறிப்பதால், சுமங்கலியின் தாலிப் பாக்கியம் நிலைத்து நிற்கும். சீப்பு கணவனின் ஆயுள் விருத்தி செய்வதற்காகவும், கண்ணாடி கணவனின் ஆரோக்கியத்திற்காகவும், வளையல் மன அமைதி பெறவும் வழங்கப்படுகிறது. பூக்கள் மகிழ்ச்சியை பெருக செய்யும்.


அன்னை மகாலட்சுமியின் அம்சமான மருதாணி நோய்கள் வராமலிருக்க உதவும் என்றால், கண் மை திருஷ்டி தோஷங்கள் அண்டாமல் காக்கும். ரூபாய் நாணயம், அன்னை லட்சுமியின் அருள் பெருகவும் உதவும் என்பது நம்பிக்கை. அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும்போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலத்தைப் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவார் என்பதும் நம்பிக்கை.  


Also Read | இன்றைய பஞ்சாங்கம்: 2021 பிப்ரவரி 17ஆம் நாள், மாசி 05, புதன்கிழமை


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR