சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? அல்லது ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க வேண்டுமா?

நீண்ட நாட்கள் ஊருக்குச் செல்லும் பட்சத்தில் வேறு யாராவது ஒருவரை தினசரி அபிஷேகம், நைவேத்தியம் செய்வதற்கு நியமிக்க வேண்டியது அவசியம்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 16, 2021, 06:09 AM IST
சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? அல்லது ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க வேண்டுமா? title=

நீண்ட நாட்கள் ஊருக்குச் செல்லும் பட்சத்தில் வேறு யாராவது ஒருவரை தினசரி அபிஷேகம், நைவேத்தியம் செய்வதற்கு நியமிக்க வேண்டியது அவசியம்!

சிவலிங்கத்தை (Shiva Lingam) வீட்டில் வைத்து வழிபடலாம். ஆனால் அளவில் சிறியதாக இருக்க வேண்டும். லிங்கத்தின் திருவுருவம் நம் கைக்குள் அடங்கும் அளவிற்கு சிறியதாக இருந்தால் நல்லது. அதாவது லிங்கத்தை உள்ளங்கைக்குள் வைத்து விரல்களை மூடினால் வெளியே தெரியக்கூடாது. தினந்தோறும் அபிஷேகம் (Abhisheka) செய்ய வேண்டும். நம்மால் இயன்ற நைவேத்தியத்தையும் தவறாமல் செய்ய வேண்டும். ஓரிரு நாட்கள் ஊரில் இல்லை எனும் பட்சத்தில் ஒரு சொம்பில் சுத்தமான நீர் (Clean water) நிரப்பி வைத்துவிட்டுச் செல்லலாம்.

ALSO READ | இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

நீண்ட நாட்கள் ஊருக்குச் செல்லும் பட்சத்தில் வேறு யாராவது ஒருவரை தினசரி அபிஷேகம், நைவேத்தியம் செய்வதற்கு நியமிக்க வேண்டியது அவசியம். இயலாத பட்சத்தில் கையோடு எடுத்துச் சென்று நீங்கள் இருக்கும் இடத்திலேயே இறைவனுக்கு (Lord) உரிய ஆராதனைகளைத் தவறாது செய்ய வேண்டும். இந்த நியமங்களைக் கடைப்பிடிக்க முடிந்தால் சிறிய அளவு சிவலிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். இயலாதவர்கள் சிவபெருமானின் படத்தை வைத்து பூஜிப்பதே நல்லது.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News