கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளுதுாக்குதலில் 69 கி.கி., எடைப்பிரிவில் தீபக் லாதர் மூன்றாவது இடம் பெற்று வெண்கலப்பதக்கம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியை வேல்ஸ் இளவரசர் சார்லஸ் தொடங்கி வைத்தார். அங்கு பல கலைநிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன. 


ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் கொடியை பிவி.சிந்து தாங்கி செல்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 218 இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 17 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது. 


முன்னதாக நேற்று நடைப்பெற்ற காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்க பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது. இன்று நடைபெற்ற மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா பானு தங்க பதக்கம் வென்றார். 


இந்நிலையில் ஆண்கள் பளுதுாக்குதலில் 69 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் டில்லி வீரர் தீபக் லாதர் மூன்றாவது இடம் பெற்று வெண்கலப்பதக்கம் கிடைத்து உள்ளது.