கோல்டுகோஸ்ட்: காமன்வெல்த் போட்டியில் மகளிர் துப்பாக்கிசுடுதலில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் மகளிர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் 10 மீ பிரிவில் தங்கம் வென்றார். இதே போன்று மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீ பிரிவில் ஹினா சித்து வெள்ளி வென்றார்.


முன்னதாக இன்று நடந்த பளு தூக்குதல் பிரிவில் 69 கிலோ எடைப்பிரிவிற்கான போட்டியில் இந்தியாவின் பூனம்யாதவ் தங்கம் வென்றார். தொடர்ந்து துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை இந்தியா வென்றதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.