டெல்லி செங்கோட்டையினை பாரம்பரிய சின்னங்களை தத்தெடுக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் டால்மியா பாரத் குழுமம் 5 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துள்ளது!
 
இதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் கலந்துகொண்ட இண்டிகோ நிறுவனம், GMR குழுமம் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி ரூ. 25 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை டால்மியா பாரத் குழுமம் வென்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் உயர் பாரம்பரிய சின்னங்களை தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் தத்தெடுக்கும் திட்டம், கடந்த செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பாரம்பரிய சின்னங்களை ஏலம் எடுக்கும் நிறுவனம், தத்தெடுக்கும் நினைவு சின்னத்தின் சுற்றுலா கட்டமைப்புகளை கட்டுமானித்தல், இயக்குதல், பராமரித்தல் ஆகிய பணிகளை மேலாண்மை செய்தல் வேண்டும்.


அந்த வகையில் நாட்டில் உள்ள 105 நினைவுச் சின்னங்களை ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக டெல்லி செங்கோட்டையினை தற்போது ஏலம் விட்டது. 


இந்த ஏலத்தில் டெல்லி செங்கோட்டியினை டால்மியா பாரத் குழுமம் 5 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



இந்த செயல்பாட்டிற்கு கடும் விமர்சணங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தினில் குறிப்பிட்டுள்ளதாவது.... மத்திய அரசின் தத்து கொடுக்கும் பணியில் இடம்பெறும் அடுத்த நினைவு சின்னம் எது என்னும் வகையில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.