12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினால் அவர்களுக்கு  மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என மேனகா காந்தி தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள உ.பி. மாநில இளம்பெண் வன்கொடுமை மற்றும், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில் மத்திய மந்திரி மேனகா காந்தி,  சிறுமிகளுக்கு எதிராக பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 


இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத்துறை (POCSO) அமைச்சர் மேனகா காந்தி பேசினார்..!கதுவா சம்பவம் உள்பட சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது. 


இனி இது போன்ற சம்பவங்கள் நடக்கா வண்ணம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் முக்கிய உறுப்பினர்கள் ஒன்று கூடி சட்ட திருத்தம் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது நாடாளுமன்றம் செயல்படாததால் அவசர சட்டம் இயற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 



ஏற்கனவே நடைமுறையில் உள்ள போஸ்கோ சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி 12 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரும் நோக்கில்  எனது அமைச்சகம் பணியாற்றி வருகிறது” என அவர் செய்தியளார்களிடம் தெரிவித்துள்ளார்.