தெற்கு டெல்லியின் சன்லைட் காலனியில் மர்மான முறையில் தொடர்சியாக நாய்கள் கொல்லப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தேடும் பணியில் டெல்லி காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPC பிரிவு 11-ன் கீழ், சமூக ஆர்வளர் ஆஷிஸ் குமார் என்பவர் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கொலையாளிகளை தேடும் பணியில் டெல்லி காவல்துறை தீவிரமாக ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆஷிஸ் குமார் குடியிருப்புக்கு அருகாமையில் சமீப காலமாக மர்மான முறையில் நாய்கள் இறந்துக்கிடப்பதாகவும், இறந்துள்ள நாய்கள் அனைத்தும் ஒத்த காய அடையாளங்களை கொண்டு இருப்பதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் நாய்களை பிடிக்காத யாரோ இந்த நாய்களை கொடூரமாக அடித்துக் கொன்று இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


குமாரின் புகாரின் அடிப்படையில் இறந்த நாய்கள் ப்ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இறந்த நாய்கள் கொடூரமாக தாக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிக ரத்த போக்கின் காரணமாக இறந்துள்ளது உறுதியானது.


இதனையடுத்து காவல்துறையினர் நாய்களை கொலை செய்யும் செயல்களில் ஈடுப்ட்டு வருவோர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.