காவிரி மேலாண்மை வாரியம் கோரி டெல்லி வாழ் தமிழர்கள் பேரணி!
காவிரி மேலாண்மை வாரியத்தினை உடனடியாக அமைக்க வேண்டும் என டெல்லி வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்!
காவிரி மேலாண்மை வாரியத்தினை உடனடியாக அமைக்க வேண்டும் என டெல்லி வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து தமிழகம் எங்கும் போராட்ங்கள் வெடித்து வருகின்றது.
காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
காவிரி பிரச்சணைக்கு தீர்வு காண, ஜல்லிக்கட்டு போராட்டத்தினை போல் மீண்டும் இளைஞர்கள் ஒன்றுகூடி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ கட்சி தலைவர்களும் ஒன்றுகூடி இளைஞர்களுக்கு தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது டெல்லி வாழ் தமிழர்கள் மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தினை உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் பேரணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த பேரணியில் குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் கலந்துக்கொண்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்!