கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், தற்போது இப்படத்தின் இசை வரும் மே 9-ஆம் நாள் வெளியாகும் என நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இப்படத்தில் வரும் செம்ம வெயிட்டு என்ற பாடலை மட்டும்  இன்று இரவு 7 மணிக்கு வெளியிட உள்ளதாக தனுஷ் ஏற்கனவே  டுவிட்டர் பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளார்.



இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற செம்ம வெயிட்டு என்ற பாடல் வீடியோவை தனுஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.