உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் உள்ள ஜெனரல் வார்டில் நோயாளிகளுடன் தெருநாய்களும் இருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிதாபூர் பகுதியில் நாய்கள் தாக்கியதில் இந்த மே மாதத்தில் மட்டுமே 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் தெரு நாய் கடித்ததில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 


இந்தநிலையில், உத்தரப்பிரதேசம் ஹர்தோய் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் ஜெனரல் வார்டில் நோயாளிகளுடன் தெரு நாய்கள் சில ஒய்வெடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இது பற்றி அங்கிருந்த நோயாளிகள் சிலர் கூறுகையில்:- தெருநாய்கள் குறித்து அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் கூறினோம். ஆனால், அதற்கு நீங்களே அந்த நாய்களைத் துரத்தி விடுங்கள் என்று அலட்சியமாகப் பதிலளிக்கிறார்கள்’ என்றனர். 



இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய சுகாதாரத் துறை அதிகாரி, விசாரணை முடிவில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.