ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் டொனால்ட் ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென், அலுவலகத்தில் எஃப்பிஐ சோதனை மேற்கொண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சார்பில் ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட்டுடன் வைத்துக் கொண்ட உறவு வெளியே சொல்லாமல் இருக்க அவருக்கு 1,30000 டாலர் கொடுக்கப்பட்டதாக அமெரிக்க முன்னணி நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த பணத்தை டொனால்ட் ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென், ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட்டுக்கு கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள சிட்டி நேஷனல் பேங்கின் வழியாக இவர்களுக்குள் பண பரிமாற்றம் நடைபெற்றது. 


.2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட், ட்ரம்ப் பற்றி எதுவும் கூறாமல் இருக்க இந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நாளிதழில் கடந்த 2006-ம் ஆண்டு கலிபோர்னியாவில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஸ்டீபனி கிளிஃபோர்ட் உறவு வைத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளது


இதுகுறித்து ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென், ஸ்டீபனி கிளிஃபோர்ட், டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது எனக் கருத்து கூறியிருந்தார்.


இந்நிலையில், டொனால்ட் ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென் அலுவலகத்தில், ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் எஃப்பிஐ சோதனை மேற்கொண்டது.


இந்த சோதனையில், வழக்கறிஞர் மைகல் கொஹென் மற்றும் அவரின் வாடிக்கையாளர்கள் பேசிய "ரகசிய தகவல்கள்" மற்றும் ஆபாச பட நடிகைக்கு பணம் வழங்கியது தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகம் தெரிவிக்கிறது.


இது குறித்து கருத்து தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப்:- தனது வழக்கறிஞர் அலுவலகத்தில் மீது எஃப்பிஐ சோதனை மேற்கொண்டது, "அவமதிப்பான செயல்" என்றும் அது "நாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்" என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும், இந்த சூனிய வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என வெள்ளை மாளிகை நிருபர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.