திமுக-காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வருகிறதா? 3வது அணிக்கு ஸ்டாலின் ஆதரவு
பாஜகவை வீழ்த்த உருவாக்கப்படும் தேசிய அளவிலான 3_வது அணிக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளார்.
தற்போது தேசிய அளவில் இரண்டு அணிகள் செயல்பட்டு வருகிறது. பாஜகா சார்பில் ஒரு அணியும், காங்கிரஸ் சார்பில் ஒரு அணியும் இயங்கி வருகிறது.
பாஜகா கூட்டணி தற்போது ஆட்சியில் உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்ச்சியில் மேற்கு வங்காளம் மாநிலத்தின் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.
இந்த முயற்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தனது வலைதளத்தில் கருத்து பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறியது,
மாநில கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிக்கு திமுக எப்போதும் ஆதரவு அளிக்கும். பாஜகவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையை பாராட்டுகிறேன் என கூறியுள்ளார்.
திடிரென மூன்றாவது அணிக்கு மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளதால், திமுக-காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வருகிறதா? என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, மூன்றாவது அணிக்கு தெலுங்கானா, ஆந்திர முதல்வர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.