தென் இந்தியாவின் 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது மேலும் இதில் மிகப் பழமையான மொழி தமிழ் தான் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும், டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தியது. அதன் முடிவில், தெற்காசிய பகுதி 600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது. அவை திராவிடம், ராவிடம், இந்தோ-ஐரோப்பா, சீனா-திபெத்தியம் உள்பட 6 மொழிக் குடும்பங்களின் கீழ் அந்த மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த 6 மொழிகளில் முதன்மையானதும், பழமையானதும் திராவிட மொழிக்குடும்பமே. இது சுமார் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.


இதில் திராவிட மொழிக் குடும்பம், சுமார் 80 மொழிகளை உள்ளடக்கியது. ஏறத்தாழ 22 கோடி மக்கள் அம்மொழிகளை தற்போது பேசுகின்றனர். திராவிட மொழிக் குடும்பத்தில் பழமையான மொழி தமிழ்தான். 


உலகின் மூத்த மொழிகளில் தமிழைப் போலவே சம்ஸ்கிருதமும் கருதப்படுகிறது. ஆனால், தமிழைப் பொருத்தவரை சமஸ்கிருதம் போல் சிதைந்து போகாமல் கல்வெட்டுக்களும், காப்பியங்களும் தற்காலம் வரை காணக்கிடைக்கின்றன. 


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.