ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள் என்பது தான் இந்தியாவின் தற்போதைய நிலவரம். இப்படி ஆண்களைப்போல் அதிகமாகப் பெண்களும் இன்றைக்கு மதுவினை நாடிச்செல்ல மிக முக்கியக் காரணமாக அமைவது, ஆண் நபரின் தூண்டுதல் மற்றும் மரபுவழிப் பழக்கம் என்று சொல்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்களை விட மதுவுக்கு அடிமையாகும் பெண்களே அதிகப்படியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தற்போது பலருக்கு உடல்நலத்தின் மீது அக்கறை அதிகம் இருப்பதால், மதுவை பருகினாலும் அதனால் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென்று யோசித்து, அதற்கேற்றாற் போல் நடக்கின்றனர்.


 


சரி,  நீங்கள் மது அருந்திய பின்னர் எவ்வித உடல்நல பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் இந்த உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது


எண்ணெயில் பொரித்த உணவுகள் வேண்டாம்..!


ஆல்கஹால் பலருக்கு அசிடிட்சியை ஏற்படுத்தும்.  நீங்கள் மது அருந்திய பின்னர் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், மது அருந்திய பின் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது. 


சீஸ் நிறைந்த உணவுகளை தவிர்க்க!


பெரும்பலோனோர் ஆல்கஹால் அருந்தும் போது, சீஸ் நிறைந்த உணவுகளான பிட்சா, பாஸ்தா போன்றவற்றை அதிகம் உட்கொள்வார்கள். இவை உடலுக்கு நன்மையற்ற மற்றும் எளிதில் செரிமானமாகாத உணவுப் பொருட்களில் ஒன்று. ஆகவே இவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம்.