பிரபல நடிகை ஸ்ரேயா தனது காதலரை திருமணம் செய்து உள்ளார். ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், மழை உள்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர்.


இவர் ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர்களுடைய திருணம் குடும்ப முறைப்படி மார்ச் 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த தகவலை ஸ்ரேயா மறுத்திருந்தார்.


இந்நிலையில் இவர்களின் திருமணம் மும்பையில் உள்ள ஸ்ரேயா வீட்டில் அவர்களின் குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் மார்ச் 12 ஆம் நடந்தது. இந்த திருமணத்தில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்டதாகவும். பிரபலங்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.


தற்போது இவர் தமிழில் அரவிந்த் சாமி ஜோடியாக நரகாசூரன் என படத்தில் நடித்து வருகிறார். 


மற்ற மொழி படங்களை விட ஸ்ரேயா தமிழ் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். இவருக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பு இருந்ததால் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விக்ரம், விஜய் என பலருடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.