புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் தான் நடிகையர் திலகம். ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் கோலிவுட்டிலும், ‘மகாநதி’ என்ற பெயரில் டோலிவுட்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை சாவித்திரி 60-ம் மற்றும் 70-ம் ஆண்டு காலகட்டங்களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். 


அந்த வகையில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை சினிமா படமாக எடுத்து வருகிறார் இயக்குனர் நாக் அஸ்வின். மேலும் ‘வைஜெயந்தி மூவீஸ் - ஸ்வப்ன சினிமா’ நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.


இந்த திரைப்படம், வரும் மே 9ம் தேதி ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டில் ரிலீசாகிறது. 


இந்தப் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்திருக்கிறார், கீர்த்தி சுரேஷ். அவருக்கு பானுப்பிரியா டப்பிங் பேசியிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் சமூக வலை தளங்களில் பரவினர்.


இது குறித்து கீர்த்தி சுரேஷிடம் விசாரித்தபோது, 'இப்போது நான் நடிக்கும் படங்களுக்கு நான்தான் டப்பிங் பேசுகிறேன். பானுப்பிரியா டப்பிங் பேசியிருப்பதாக வெளியான தகவல் பொய்யானது.


மகாநதி தெலுங்கு படத்துக்கு நான் டப்பிங் பேசி முடித்து விட்டேன். மே 9ல் ரிலீசாகிறது. அடுத்து நடிகையர் திலகம் படத்துக்கு டப்பிங் பேசுகிறேன். மகாநதி படத்தில் பானுப்பிரியா நடித்துள்ளார். அவரது கேரக்டருக்கு அவர் டப்பிங் பேசியதை வைத்து, எனக்கு பேசியதாக வதந்தி பரவியுள்ளது' என்றார். 


முன்னதாக, தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நாயகியாக நடித்தவா் பானுப்பிரியா. திருமணமான பின் அம்மா மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்தார் பின்னர் இவர் டி.வி தொடர்களிலும் நடித்தார் என்பது குறிபிடத்தக்கது.