புதுடெல்லி: இராணுவப் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்கு விரும்புபவரா நீங்கள்? ராணுவ பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு தொடங்கிவிட்டது: PGT, TGT மற்றும் PRT பதவிகளுக்கு காலியிடங்களை நிரப்பும் பணி தொடங்கிவிட்டது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 5, 2022 க்கு முன் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ராணுவ நலக் கல்விச் சங்கம், AWES, ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக விண்ணப்பங்களை வரவேற்கிறது. PGT, TGT மற்றும் PRT பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் awesindia.com என்ற AWES இன் அதிகாரப்பூர்வ தளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆன்லைன் பதிவு செயல்முறை ஆகஸ்ட் 25, 2022 அன்று தொடங்கிவிட்டது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அக்டோபர் 5க்கு முன்னதாக விண்ணப்பிக்கவும். அன்று தான் விண்ணப்பிக்க கடைசி நாள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க முக்கியமான தேதிகள், தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்களைப் தெரிந்துக் கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | UPSC-யில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு


முக்கிய நாட்கள்


விண்ணப்ப செயல்முறை தொடங்கியதேதி: ஆகஸ்ட் 25, 2022
விண்ணப்பிக்க இறுதி நாள்: அக்டோபர் 5, 2022
அட்மிட் கார்டு வழங்கல்: அக்டோபர் 20, 2022
தேர்வு: நவம்பர் 5 மற்றும் 6, 2022
முடிவு வெளியீடு: நவம்பர் 20, 2022


இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்திற்கு விண்ணப்பிக்க தகுதிகள் என்னென்ன இருக்க வேண்டும் என்று தெரிந்துக் கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | மருந்தாளுநர் பணிக்கான வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்


பிஜிடி, டிஜிடி: பி.எட்
PRT: இரண்டு வருட D.El.Ed./B.El.Ed. அல்லது பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். NCTE அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ஆறு மாத PDPET/பிரிட்ஜ் பாடத்திட்டத்தின் நிபந்தனையை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் மற்றும் PRT ஆக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் அல்லது பாடத்திட்டத்தின் தொடக்கத்தில் எது பிந்தையதோ அந்த பாடத்திட்டத்தை நடத்துவதற்கு NCTE அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் படித்திருக்கவ் ஏண்டும்.  


தேர்வு செயல்முறை


தேர்வு செயல்முறையானது, ஆன்லைன் ஸ்கிரீனிங் தேர்வு, நேர்காணல் மற்றும் கற்பித்தல் திறன் மற்றும் கணினி திறன் மதிப்பீடு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அனைத்து இராணுவ பொதுப் பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்களின் சீரான தரத்தை உறுதி செய்வதற்காக, HQ AWES ஆல் அடையாளம் காணப்பட்ட ஏஜென்சியால் இந்த சோதனை மையத்தில் ஆன்-லைன் தேர்வும் நடத்தப்படும். மேலும் தொடர்புடைய விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் AWES இன் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்க்கலாம்.


மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ