நாடு முழுதும் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி போன்ற, மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற இருக்கும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு (NEET EXAM 2021) ஹால் டிக்கெட் மற்றும் 12ஆம் தேதி நடைபெற இருக்கும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 


ALSO READ | நீட் தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்


நடப்பு ஆண்டு நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டை விட குறைவாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டு 155 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு 198 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. 


இந்நிலையில் வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, மொத்தம் 202 நகரங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்பு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்நீட் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகளை http://neet.nta.nic.in இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


முன்னதாக நேற்று 16 லட்சம் மாணவர்கள் பங்கு பெறக் கூடிய நீட் தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது எனக்கூறி நீட் தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தனர் உச்சநீதிமன்றம் நீதிபதிகள். இதனையடுத்து செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | நீட் தேர்வு முறையில் மாற்றம், இண்டர்னல் சாய்ஸ் உண்டு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR