புதுடெல்லி: 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ வெளியிட்டது. முன்னதாக நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசுகையில், CBSE 10 ஆம், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த நேரத்தில் வெளியிடப்படும் என்றும், தாமதம் ஏற்படாது என்றும் அவர் கூறினார். அதேபோல, தற்போது 12ம் வகுப்பு முடிவுகள் வெளியாகின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவின் திருவனந்தபுரம் 98.83% தேர்ச்சி சதவீதத்தை பதிவு செய்து, சிறப்பாக செயல்படும் மண்டலமாக உருவெடுத்துள்ளது, அதைத் தொடர்ந்து 98.16 சதவீத தேர்ச்சியுடன் பெங்களூரு இரண்டாவது இடத்தையும், 97.79 சதவீதத்துடன் சென்னை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
 
வெளியான சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், ஆண்களை விட பெண்கள் 3.29 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.  91.25 சதவீத தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் ஒப்பிடுகையில், பெண்கள் 94.54 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து திருநங்கை மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மேலும் படிக்க | பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவது எப்படி


சிபிஎஸ்இ டெர்ம் 2 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கியது.. அதன் பிறகு 10 ஆம் வகுப்பு தேர்வு மே 24 ஆம் தேதி வரையும் மற்றும் 12ம் வகுப்பு தேர்வு 2022 ஜூன் 15 தேதி வரையும் நடைபெற்றது. தற்போது, இந்த தேர்வு ​​முடிவுகள் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்புக்காக வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக மாணவர்கள் காத்திருந்தனர். 


இந்த நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெள்ளிக்கிழமை (2022, ஜூலை 22) வெளியிட்டது. தேர்வு முடிவுகள், இப்போது ஆன்லைனில் results.cbse.nic.in மற்றும் cbse.gov.in இல் கிடைக்கிறது.மாணவர்கள் தங்கள் கணக்குகளில் உள்நுழைந்து டிஜிலாக்கரில் சிபிஎஸ்இ முடிவுகளை ஆன்லைனில் பார்க்கலாம்.


CBSE 12வது முடிவைப் பெற விண்ணப்பதாரர்கள் SMS சேவையையும் பயன்படுத்தலாம். (cbse10(rollno) (sch no) (center no)) போன்ற தொடர்புடைய தகவல்களைத் தட்டச்சு செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பினால் போதும். 


குறிப்பு: CBSE 12வது முடிவுகள் தற்போது பரிக்ஷா சங்கம் (Pariksha Sangam) என்ற வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.. மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். CBSE 12வது முடிவு 2022 மதிப்பெண் பட்டியல் டிஜிலாக்கரில் கிடைக்கிறது


தேர்வு முடிவுகளை, வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் இருந்து தெரிந்துக் கொள்லலாம். மணவர்கள் தங்களுடைய ரோல் எண், பள்ளிக் குறியீடு, பிறந்த தேதி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளம் தவிர, டிஜிலாக்கர் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் ரிசல்ட்டை பார்க்கலாம். 


மேலும் படிக்க | சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் தொடர்பான புதிய அப்டேட்


எஸ்எம்எஸ் மூலம் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவை எவ்வாறு சரிபார்ப்பது
எஸ்எம்எஸ் மூலம் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவைச் சரிபார்க்க, cbse12 என டைப் செய்து ஸ்பேஸ் கொடுங்கள். இதற்குப் பிறகு உங்கள் ரோல் எண்ணை டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.



சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களைச் சரிபார்க்க அதிகாரப்பூர்வ இணையதளங்கள்
www.cbseresults.nic.in 
www.results.gov.in
www.digilocker.gov.in


மேலும் படிக்க | 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ