2021 ஆம் ஆண்டின் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பயன்பாடு அடிப்படையிலான கேள்விகள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"மேலும் நிகழ்வாய்வுகள் அதாவது கேஸ் ஸ்டடி அடிப்படையிலான கேள்விகளும் இருக்கும். இதில் மாணவர்களுக்கு ஒரு பத்தி வழங்கப்படும். அவர்கள் பத்தியைப் படித்த பிறகு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இது மாணவர்களின் வாசிப்புத் திறன், புரிதல், விளக்கம் மற்றும் பதில் எழுதும் திறன்களை மதிப்பீடு செய்யும். மனப்பாடம் மட்டும் செய்து எழுதும் பழக்கத்தை மாற்றி புரிந்து கொண்டு எழுதும் பழக்கத்தை ஏற்படுத்தும்” என்று CBSE-யின் கல்வியாளர்கள் இயக்குனர் ஜோசப் இம்மானுவேல் கூறினார்.


முன்னதாக, இந்த கேள்விகளுக்கு ஒரு மதிப்பெண் வாழ்ங்கப்பட்டது. ஆனால், 2021 ஆம் ஆண்டு முதல், இப்படிப்பட்ட கேள்விகள் குறுகிய அல்லது நீண்ட கேள்விகளாக (short and long questions) மாற்றப்படலாம் என தெரிய வந்துள்ளது. புதிய வடிவத்தின் அடிப்படையில் CBSE ஏற்கனவே மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


இம்மானுவேல் கூறுகையில், “இது NEP-ஐ நோக்கிய ஒரு சிறிய படியாகும். ஆசிரியர்கள் திறன் சார்ந்த கல்வியை அடிப்படையாகக் கொண்டு கற்பிப்பதைத் தொடங்குவார்கள். மதிப்பெண் சார்ந்து அல்லது தேர்வுகள் சார்ந்து மட்டும் கற்பதும் கற்பிப்பதும் இனி படிப்படியாகக் குறையும்.” என்று கூறினார்.


பொதுத் தேர்வுகளை “தகுதி அடிப்படையிலானதாக” மாற்றுவதற்காக இந்த மாற்றத்தை அறிமுகப்படுத்த CBSE திட்டமிட்டுள்ளது. இந்த கேள்விகள் நிஜ வாழ்க்கையில் பாட கருத்துகளைப் புரிந்துகொள்வதற்கும் பயன்படுத்துவதற்குமான மாணவர்களின் திறனை மதிப்பிடுவதற்கு உதவும்.


ALSO READ: CBSE 10, 12 ஆம் வகுப்பு 2021 பொதுத் தேர்வுகள் தாமதிக்கப்படுமா?


"எங்கள் நோக்கம் என்னவென்றால், மாணவர்கள் வகுப்பில் கற்ற கருத்துக்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தேர்வை எழுதுவதற்கு மட்டுமல்லாமல் வாழ்க்கையின் பயன்பாட்டிற்காக மாணவர்கள் கல்வியைக் கற்க வேண்டும். வருங்காலத்தில் கல்லூரி சேர்க்கைக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வெவ்வேறு வழிகள் இருக்கும் என்று தேசிய கல்வி கொள்கை (NEP) கூறுகிறது. அப்படி நடந்தால், பொதுத் தேர்வுகளில் அதிக அழுத்தம் இருக்காது. இது பயன்பாடு அடிப்படையில் எளிதாக நடத்தப்படும். இந்த திசையை நோக்கிய ஒரு சிறு படிதான் இது” என்று இம்மானுவேல் கூறினார்.


கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஆறு மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால், வரவிருக்கும் பொதுத் தேர்வுகளுக்கு (Board Exams) CBSE ஏற்னவே பாடத்திட்டத்தை 30 சதவீதம் குறைத்திருந்தது நினைவிருக்கலாம்.


ALSO READ: 2021 ஆம் ஆண்டின் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை வழக்கத்தை விட முன்னதாக நடத்தவுள்ளதா CBSE?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR