லக்னோ: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வெள்ளிக்கிழமை (மார்ச் 5) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டது. CBSE இந்த ஆண்டு மே 4 முதல் ஜூன் 14 வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12 ஆம் வகுப்புக்கான மாற்றங்கள்


CBSE-யின் திருத்தப்பட்ட அட்டவணையில் பல மாறுபாடுகள் செய்யப்பட்டுள்ளன. புவியியல் (Geography) தேர்வு இப்போது ஜூன் 3 ஆம் தேதி நடக்கும். இயற்பியல் (Physics), பயன்பாட்டு இயற்பியல் (Applied Physics) ஆகிய தேர்வுகள் 13 மே, 2021-க்கு பதிலாக ஜூன் 8, 2021-க்கு மாற்றப்பட்டுள்ளன. கூடுதலாக மே 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாது என்பதையும் புதிய அட்டவணை காட்டுகிறது.


10 ஆம் வகுப்புக்கான மாற்றங்கள்


புதிய அட்டவணையில் 10 ஆம் வகுப்பின் கணிதத் தேர்வுக்கான தேதி மே 21-லிருந்து ஜூன் 2 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதைத் தவிர, பிரெஞ்சு, ஜெர்மன், அரபு, சமஸ்கிருதம், மலையாளம், பஞ்சாபி, ரஷ்ய மற்றும் உருது ஆகியவற்றுக்கான தேர்வு தேதிகளும் மாற்றப்பட்டுள்ளன.


திருத்தப்பட்ட அட்டவணையை இங்கு காணலாம்:


12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும்.


10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும்.


பிராக்டிகல் தேர்வுகள் (Practical Exams) மார்ச் 1 முதல் பள்ளிகளால் தொடங்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகளின் முடிவுகள் ஜூலை 15 க்குள் அறிவிக்கப்படும்.


ALSO READ: Board Exam: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு; தமிழக அரசு அறிவிப்பு


CBSE 10, 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தெர்வுகளுக்கான பிற முக்கிய அம்சங்கள் இதோ:


1. ஒவ்வொரு தேர்வுக்குமான கால அளவும் அட்டவணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


2. இருப்பினும், ஒவ்வொரு பாடத்திற்கும் / தேர்வுக்கும் வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள கால அளவு துல்லியமாக பின்பற்றப்பட வேண்டும்.


3. விவரங்களை உதவி கண்காணிப்பாளர் சரிபார்த்து கையொப்பமிட வேண்டும்.


4. மாணவர்கள் தங்கள் விவரங்களை விடைத்தாளில் (Answer Sheet) எழுதுவார்கள்.


5. விடைத்தாள் காலை 10.00 முதல் 10.15 மணி வரை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும்.


6. வினாத்தாள் காலை 10.15 மணிக்கு விநியோகிக்கப்படும்.


7. மாணவர்கள் வினாத்தாளைப் படிக்க வேண்டும்.


8. மாணவர்கள் பதில்களை எழுத சரியான வழிமுறையை திட்டமிட்டு அதன்படி விடைகளை எழுத வேண்டும்.


9. காலை 10.30 மணிக்கு மாணவர்கள் பதில்களை எழுதத் தொடங்குவார்கள்.


10. சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு, தயவுசெய்து www.cbsenic.in -ஐப் பார்வையிடவும்


இதற்கிடையில், தேர்வு நாட்களில் நெரிசலையும் கூட்டத்தையும் குறைக்க 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இரண்டு ஷிப்டுகளில் நடத்தப்படும் என்று CBSE முன்பு அறிவித்தது.


"பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் இரண்டு முக்கிய பாடங்களுக்கு இடையில் போதுமான கால அளவு வழங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, தேர்வுகளுக்கு அவர்கள் சிறந்த முறையில் தயாராக உதவும்.” என்று சிபிஎஸ்இ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.


ALSO READ:NEET 2021: இந்த ஆண்டு இரண்டு முறை நடக்குமா NEET தேர்வு? எதிர்பார்ப்பில் மாணவர்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR