CBSE Board Exam 2021 Date Sheet: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை (Date Sheet) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ட்வீட் செய்துள்ளார்.
"அன்புள்ள மாணவர்களே, நீங்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகளின் டேட் ஷீட்டை அறிவிக்கிறோம். இந்த தேர்வுகள் சுமுகமாக நடப்பதை உறுதிசெய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!" என்று அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
Dear Students, hereby announcing the much-awaited date-sheet of @cbseindia29 board exams of X & XII.Please be assured that we have done our best to ensure that these exams go smoothly for you. Wish you good luck! @SanjayDhotreMP @EduMinOfIndia @PIB_India https://t.co/P9XvyMIfNq
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) February 2, 2021
தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மே 4 முதல் ஜூன் 10 வரை ஆஃப்லைன் முறையில் தேர்வை எதிர்கொள்வார்கள். இந்த ஆண்டு CBSE பொதுத் தேர்வுகளை சுமார் 30 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வுகளின் ஆரம்ப தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வு அட்டவணை CBSE-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.nic.in. –ல் மாணவர்களுக்கு கிடைக்கும்.
CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகளின் அட்மிட் கார்டுகள் (Admit Card) ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டுமென CBSE –ல் வெளியிடபட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பாடத்திட்டம் 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தாளில் 33 சதவீத உள் தேர்வு கேள்விகள் (Internal Choice Questions) இருக்கும்.
ALSO READ: CBSE 10,12ம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணை இன்று வெளியீடு!
தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் வசதிக்காக, CBSE-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து டேட் ஷிட்டை (Date Sheet) எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது பற்றிய விவரங்களை இங்கு அளித்துள்ளோம்:
Step 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.nic.in –க்கு செல்லவும்.
Step 2: ‘Çlasses 10,12 Date Sheet’என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
Step 3: 10 மற்றும் 12 ஆம் வகுப்பின் அட்டவணை திரையில் தோன்றும்
Step 4: இதை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். மேலதிக குறிப்புகளுக்கு பிரிண்ட் எடுத்துக்கொள்வதும் நல்லது.
இந்த ஆண்டு, அனைத்து COVID-19 தொற்று வழிகாட்டுதல்களையும் பின்பற்றி CBSE பொதுத் தேர்வுகள் (Board Exams) நடத்தப்படும். முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருக்கும். மேலும் சமூக இடைவெளியை கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும். மார்ச் 1 முதல் பள்ளிகள் பிராக்டிகல் தேர்வுகளை நடத்தும். ஜூலை 15 க்குள் பொதுத் தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்படும்.
CBSE, பள்ளிகளுக்கான இணைப்பு முறையை மறுசீரமைத்து, இந்த செயல்முறையை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. குறைந்தபட்ச மனித தலையீட்டுடன் தரவு பகுப்பாய்வுகளின் அடிப்படையில் செய்யப்படும் முறைமையாக இது இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய முறை, புதிய தேசிய கல்விக் கொள்கையில் (NEP) வகுக்கப்பட்டுள்ள முறையான சீர்திருத்தங்களுக்கான பல்வேறு பரிந்துரைகளின் படி மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
ALSO READ: CBSE 10, 12 வகுப்புகளுக்கான தேர்வுகள் எப்போது? கல்வி அமைச்சர் அறிவிக்கிறார்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR