CBSE Term 1 ரிசல்ட்ஸ் வெளியீடு - ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முதல் பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று (மார்ச் 19, 2022) CBSE 12 ஆம் வகுப்பு முதல் பருவ தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் வெளியிடப்பட்ட முடிவுகளை மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் CBSE, cbse.gov.in அல்லது cbseresults.nic.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் மதிப்பெண்களை உடனடியாக சரிபார்க்க முடியும்.
மேலும் படிக்க | TNPSC Exam: குரூப் 2, 2A இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - 5529 காலிப்பணியிடங்கள்
CBSE 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; ஆன்லைனில் மதிப்பெண்களைச் சரிபார்ப்பது எப்படி?
* சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in செல்லுங்கள்.
* முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் சிபிஎஸ்இ முடிவுகள் இணைப்பைப் பார்வையிடவும்.
* உங்கள் உள்நுழைவு தகவலை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி (Submit) என்பதைக் கிளிக் செய்யவும்.
* திரையில், உங்கள் இறுதி முடிவைக் காண்பீர்கள்.
* மதிப்பெண் பட்டியலை சரிபார்த்து உங்கள் கணினியில் சேமிக்கவும்.
* எதிர்கால தேவைக்காக பதிவிறக்கம் செய்த மதிப்பெண் பட்டியலை பிரிண்ட் அவுட்டும் எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
இதேபோல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான 2 ஆம் பருவத்துக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி செவ்வாய்கிழமை தொடங்கி, மே 24 ஆம் தேதி முடிவடைகிறது. 12 ஆம் வகுப்புகளுக்கான 2 பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி தொடலங்கி, ஜூன் 15 ஆம் தேதி புதன்கிழமை நிறைவடைகின்றன.
மேலும் படிக்க | சென்னையில் TNPSC குரூப் 2 இலவசப் பயிற்சி: அம்பேத்கர் கல்வி மையம் அழைப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR