தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் குரூப் 2 மற்றும் 2aவிற்கான முதல் நிலைத் தேர்வு 2022-ல் வரும் மே மாதம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளிவந்து மாணவர்கள் வேகமாக விண்ணபித்தும் வருகின்றனர். 5800க்கும் மேலான காலிப் பணியிடங்களை அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து மாணவர்களுக்கு உடனடியாக குரூப் 2 மற்றும் 2a போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சியளிக்க Dr. அம்பேத்கர் கல்வி மையம் தயாராகி உள்ளது. ஏற்கெனவே Tnpsc குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் (Prelims) வெற்றிபெற்ற மாணவர்கள் முதன்மைத் தேர்வைச் சிறப்பாக எழுதியுள்ள நிலையில் அவர்களும் குரூப் 2 மற்றும் 2a மாதிரி தேர்வை (Test batch and discussion) எழுதத் தயாராக உள்ளனர்.
மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள குறுகிய கால இடைவெளியே உள்ளதால் மாதிரித் தேர்வை தொடர்ந்து விரிவான கலந்துரையாடலையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு தேர்வாணையம் நடத்த உள்ள தேர்வில் மாணவர்களுக்குத் தகுதி நிலையை நிர்ணயம் செய்யவும் தயாராகி வருகிறது. சூழ்நிலைகளைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி உறுதியாகத் தேர்வை எதிர்கொண்டு
வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
மாணவர்களின் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி பொதுவான பட்டப்படிப்பு என்றாலும், வயது உச்ச வரம்பு மற்றும் இதர விவரங்களை முழுமையாக அறிந்துகொள்ள தமிழ்நாடு அரசின் தேர்வாணைய இணையதளத்தைச் சென்று ( www.tnpsc.gov.in ) பார்க்கலாம்.
இதுகுறித்து Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ந. வாசுதேவன் கூறுகையில், ''குரூப் 2 தேர்வில் பங்குபெறும் மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், தொழில் நுட்பரீதியாகவும் மாணவர்களுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலும் இருக்கும். அதிகபட்சமாக வகுப்புகள், மாதிரி தேர்வும் அதையொட்டிய கலந்துரையாடல் வடிவத்திலேயே இருக்கும். தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களும் திறமையான ஆசிரியர்களும் ஆலோசனைகளை வழங்குவார்கள். அரசுத் துறைகளில் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இவ்வகுப்புகளை, Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து நடத்தி வருகிறது.
மேலும் படிக்க | TNPSC Exam: குரூப் 2, 2A இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - 5529 காலிப்பணியிடங்கள்
தலித்துகள் மற்றும் பழங்குடியின மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட ஏனைய பொருளாதாரத்தில் பின்தங்கிய, அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக களத்தில் நமக்கு கிடைத்த முன் அனுபவங்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளைச் சிறப்பாக நடத்தி வருகின்றோம். இங்கு பயின்ற 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசுத்துறைகளின் பல்வேறு நிலைகளில் சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர்.
சென்னையில் ஏற்கெனவே பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில் காலியாக உள்ள மிகக் குறைவான இடங்களை நிரப்ப ஆர்வமாக உள்ளோம். மாணவர்கள் தேர்விற்காகப் படித்திருந்து கூடுதலாக வழிகாட்டுதல் தேவைப்படும் மாணவர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை வகுப்புகள் வாரந்தோறும் நடக்கும். ஒவ்வொரு வாரமும் நடக்கும் இந்த மாதிரி தேர்வுடன் கூடிய சிறப்பம்சமே எல்லா மாணவர்களும் கலந்துரையாடலில் பங்கேற்றுத் தனது திறமையை மேம்படுத்துவதுடன் தேர்வில் அதிகபட்ச பலத்தோடு வெற்றி பெறுவதுதான்.
Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மாணவர்களுக்காக தனது வகுப்புகளை ஈரோடு, (அண்ணாதுரை- 9443330334) கோயம்புத்தூர், (சுரேஷ் - 94881 55191) செங்கல்பட்டு ( இராமலிங்கம். 90808 57086.) ஆகிய இடங்களில் tnpsc வகுப்புக்களை நடத்தி வருகிறது. தேவைப்படும் மாணவர்கள் இவர்களை அணுகலாம். சமூக அக்கறையுடன் பின்தங்கிய மாணவர்களுக்கு தன்னார்வத்துடன் வகுப்பெடுக்க விருப்பம் உள்ளவர்களும் தொடர்பு கொள்ளலாம்.
பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் கொரானா பெருந்தொற்றிற்கான இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தையும் வகுப்பிற்கு வரும் போது கொண்டுவர வேண்டும். மாணவர்கள் குரூப் 2 மற்றும் 2a தேர்விற்கு விண்ணப்பித்ததின் நகலை உடன் (Xerox copy) கொண்டு வர வேண்டும். தவறும் மாணவர்கள் வகுப்பினுள் நுழைய அனுமதியில்லை. மேலும் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட சமூக இடைவெளியுடன், கால இடைவெளியில் சானிடைசர் முறையாகப் பயன்படுத்த வேண்டும். முகக்கவசம் அவசியம். தனிநபர் இடைவெளி போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றுதல் அவசியம். மாணவர்கள் TNPSC குரூப் 2, 2a தேர்வில் முழுமையாகப் பங்கேற்று தேர்வெழுதும் முழுத் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் கட்டாயம் முன் பதிவு செய்திருக்க வேண்டும். மாணவர்கள் நம்பிக்கையுடன் கூடிய முயற்சியில் சரியான திட்டமிடலுடன் உறுதியாகத் தேர்வை எதிர்கொண்டால் எளிதாக வெற்றியைப் பெறமுடியும்'' என்று தெரிவித்தார்.
பயிற்சி நடைபெறும் இடம்: சிஐடியு அலுவலகம்.
நெ.6/9, கச்சாலீஷ்வரர் கோயில் அக்ரஹாரம், ஆர்மேனியன் தெரு, சென்னை- 600001.
பயிற்சி பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்.
சௌந்தர்: 90950 06640
அமலா: 63698 74318
ஜனனி : 97906 10961
நாகமணி: 85085 47466.
வாசுதேவன்: 9444641712
மேலும் படிக்க | TNPSC தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?