CBSE 12 ஆம் வகுப்பு முடிவுகள் வெளிவந்தன: எங்கு எப்படிப் பார்ப்பது?
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை (Class 12 Results) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 15 ஆம் தேதிக்குள் மாணவர்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ முன்னதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. மாணவர்கள் CBSE-ன் அதிகாரப்பூர்வமாக வலைதளத்தில் ஆன்லைனில் தங்கள் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம். இது தவிர மாணவர்கள் டிஜிலொக்கர் (DigiLocker) மற்றும் உமங் (UmangApp) போன்ற மொபைல் செயலிகள் (Mobile Apps) மூலமும் தங்கள் மதிப்பெண்ணைப் பார்க்கலாம்.
CBSE வலைத்தளம் மூலம் மதிப்பெண்களை எவ்வாறு தெரிந்துகொள்வது என்று பார்க்கலாம்:
1) cbseresults.nic.in அல்லது cbse.nic.in
என்ற CBSE-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
2) 2020 முடிவுகளுக்கான லிங்கை இளிக் செய்யவும்.
2) உங்கள் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
3) பின்னர் உங்கள் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
4) மதிப்பெண்கள் திரையில் காண்பிக்கப்படும்.
5) முடிவைப் பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.
results.gov.in என்ற வலைத்தளத்தில் தங்கள் ரோல் நம்பர் மூலம் லாக் இன் செய்தும் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.
டிஜிலாக்கர் செயலி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள், இடம்பெயர்வு சான்றிதழ் மற்றும் பாஸ் சான்றிதழ் போன்ற டிஜிட்டல் கல்வி ஆவணங்களை, தனது கல்வி களஞ்சியமான ‘பரிணாம் மஞ்சுஷா’ மூலம் வழங்கி டிஜிலாக்கருடன் ஒருங்கிணைக்கும். டிஜிலாக்கர் கணக்கு நற்சான்றிதழ்கள் சிபிஎஸ்இ-யில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் எஸ்எம்எஸ் மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
உமங் செயலி
அண்ட்ராய்டு, iOS பயனர்களுக்குக் கிடைக்கும் UMANG மொபைல் செயலியிலும் மாணவர்கள் தங்கள் முடிவுகளைக் காணலாம். 12 ஆம் வகுப்பு Marksheet Tab-ஐ கிளிக் செய்யவும். பின்னர், உங்கள் அட்மிட் கார்ட் ஐடி, ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை நிரப்பவும். பின்னர் நீங்கள் உங்கள் மதிப்பெண்ணைப் பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
CBSE 10, 12 வது முடிவுகள் மாணவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலும் அனுப்பப்படும். மாணவர்கள் மைக்ரோசாஃப்ட் எஸ்எம்எஸ் ஆர்கனைசர் செயலியை (Organiser App) பதிவிறக்கம் செய்து தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த செயலி மூலம், மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை எஸ்எம்எஸ் மூலம் பெறலாம்.
ALSO READ: 500/500 மதிப்பெண் பெற்று 10ஆம் வகுப்பு மாணவி Rishita சாதனை