2021 ஆம் ஆண்டின் 10, 12, NEET, JEE தேர்வுகளை தள்ளிப்போடுமா CBSE?
மாணவர்கள் இன்னும் இந்த கல்வி ஆண்டில் ஒரு நாள் கூட பள்ளிக்கு செல்லவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இடையே, பல மாநிலங்கள் தங்கள் பொதுத் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன. இதைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சகம், 2021 ஆம் ஆண்டிற்கான CBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள், NEET மற்றும் JEE தேர்வுகள் குறித்து என்ன முடிவை எடுக்கும் என்பது பற்றிதான் அனைவரது கவனமும் உள்ளது.
பொதுவாக, CBSE, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதித் தாளை டிசம்பரில் வெளியிட்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தேர்வுகளை நடத்துவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோயால் CBSE வழக்கமான முறையில் தேர்வுகளை நடத்த முடியாமல் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில், டேட் ஷீட்டை CBSE நவம்பர் மாதம் வெளியிட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் 8 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருப்பதால், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2021 ஆம் ஆண்டு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை (Board Exams) ஏப்ரல்-மே மாதங்கள் வரை தள்ளி வைக்கக்கூடும் என சில அறிக்கைகள் தெரிவித்தன.
மேலும், மாணவர்கள் இன்னும் இந்த கல்வி ஆண்டில் ஒரு நாள் கூட பள்ளிக்கு செல்லவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆய்வகங்களில் செய்யப்படும் பிராக்டிகல் வகுப்புகளை ஆன்லைனில் புரிய வைப்பது முடியாத ஒரு விஷயமாகும். இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு CBSE முடிவெடுக்க வேண்டும்.
சில நாட்களுக்கு முன்பு, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ (Ramesh Pokhriyal Nishank) ட்வீட் செய்து, அடுத்த ஆண்டு தேர்வுகளை எப்படி, எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டறியும் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று கூறினார்.
"அடுத்த ஆண்டு தேர்வுகளை எவ்வாறு, எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற கல்வி அமைச்சினால் ஒரு பிரச்சாரம் தொடங்கப்படும்" என்று நிஷாங்க் ஒரு உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு ட்வீட் செய்து தெரிவித்தார்.
ALSO READ: திருத்தப்படுகிறதா 2021 JEE Main, NEET syllabus: என்ன கூறுகிறது கல்வி அமைச்சகம்
தற்போதைய நிலைமையை மறுஆய்வு செய்யவும், 2021 JEE Main மற்றும் NEET தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டங்களைப் பகிர்ந்து கொள்ளவும் மத்திய அமைச்சர் தேசிய தேர்வு முகமையிடம் (NTA) அறிவுறுத்தியுள்ளார். பாடத்திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்னர் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மத்திய பள்ளி கல்வி வாரியங்களில் உள்ள நிலைமையைப் பற்றி கண்டறியவும் NTA கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
"பல்வேறு வாரியங்களில் தற்போதைய சூழ்நிலையை மதிப்பிட்ட பிறகு நுழைவுத் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை NTA வெளியிடும் என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு எவ்வாறு, எப்போது தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற கல்வி அமைச்சினால் ஒரு பிரச்சாரம் தொடங்கப்படும்” என்று கல்வி அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.
ALSO READ: CBSE 10, 12 ஆம் வகுப்பு 2021 பொதுத் தேர்வுகள் தாமதிக்கப்படுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR