கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு திங்களன்று, பள்ளிகளைத் திறக்க காலக்கெடு எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்ட மத்திய அரசு, பள்ளிகள் திறக்கப்படுவவதற்கான காலம் COVID-19 பரவும் நிலைமையைப் பொறுத்தது என்று கூறியது. நாட்டில், சண்டிகர் யூனியன் பிரதேசம் மட்டுமே பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றும் மத்திய அரசு  மேலும் கூறியுள்ளது.


ALSO READ | பொய் சொல்லி மாட்டிக் கொண்டாரா கனிமொழி... சூடு பிடிக்கும் அரசியல் களம்...!!!


இந்த விவகாரம் தொடர்பாக, அடுத்த 10-15 நாட்களில் சுகாதார அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்யும் என்றும் மத்திய மேலும் கூறியது. "பள்ளிகளைத் திறப்பது தொடர்பான எந்தவொரு முடிவும் மாணவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து எடுக்கப்படும்" என்று மத்திய அரசு கூறியுள்ளது.



முன்னதாக பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) நியமித்த குழு, பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள், செப்டம்பர் முதல் இயங்க தொடங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது. லாக்டவுன் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையின் காரணமாக இழந்த வகுப்புகள் மற்றும் ஆன்லைன் கல்வி தொடர்பான விஷயங்களை ஆராய யுஜிசி 2 குழுக்களை அமைத்தது.


ALSO READ | தண்ணீரில் மூழ்கியவர்களை துகில் தந்து உயிர் காத்த வீர தமிழ் பெண்கள்..!!!


பள்ளிகளை மீண்டும் திறக்கும் போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் முன்பு கூறியிருந்தார். 


கொரோனா வைரஸ் காரணமாக கூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்க அதிக காலமானால் மாணவர்களுக்கு அதனால், கல்வி பாதிப்பு ஏற்படகூடாது என்பதை தனது அமைச்சகம் உறுதி செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார்.


“நாட்டில் 34 கோடி மாணவர்கள் உள்ளனர், இது அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகம். மாணவர்கள் நமது மிகப்பெரிய சொத்து. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு அரசுக்கு மிக முக்கியமானது, ”என்று அவர் கூறினார்.


முன்றாம் கட்ட அன்லாக்கிற்கான வழிகாட்டுதல்களை அறிவிக்கும் அதே வேளையில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் 31 வரை மூடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.