சிஐஎஸ்சிஇ ஐஎஸ்சி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2022 வெளியிடப்பட்டது: இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) ஐ.எஸ்.சி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cisce.org, results.cisce.org ஐப் பார்வையிடுவதன் மூலம் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பார்வையிடலாம். இதனுடன், எஸ்எம்எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகளை சரிபார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெண்கள் மீண்டும் முன்னிலை
இம்முறை சிஐஎஸ்சிஇ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ஆண்களை விட பெண் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் சிறப்பாக உள்ளது. மொத்தம் 99.52 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும், சிறிய வித்தியாசத்தில் மாணவர்களை விட மாணவிகள் சிறந்து விளங்கினர். அதன்படி இந்த முறை மொத்தம் 99.26 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் அறிவித்துள்ளது.


மேலும் படிக்க | CBSE 12 Result 2022: எந்தெந்த செயலிகளில் சிபிஎஸ்இ ரிசல்ட் பெறலாம்


18 மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்
இந்த ஆண்டு தேர்வில் 18 மாணவர்கள் 99.75 சதவீத மதிப்பெண்களுடன் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டனர். மொத்த தேர்வு முடிவுகள் குறித்து பேசுகையில், இம்முறை 99.38 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இரண்டு செமஸ்டர்களில் தேர்வு
இந்த முறை தேர்வு இரண்டு செமஸ்டர்களாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டு செமஸ்டர் 1 தேர்வின் மதிப்பெண்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளன (ஜியோமெட்ரிக் மற்றும் மெக்கானிக்கல் வரைதல் மற்றும் கலை தவிர). இந்த மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண்ணை அடைய செமஸ்டர் 2 மதிப்பெண்ணுடன் சேர்க்கப்படும்.


செமஸ்டர் 1 நகல் வழங்கப்படவில்லை
இதற்கிடையில் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் செமஸ்டர் 1 தேர்வு முடிவின் எந்த நகலையும் வெளியிடவில்லை மற்றும் இரண்டு செமஸ்டர்களின் முடிவையும் ஒரே நேரத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் தொடர்பான புதிய அப்டேட்


எஸ்எம்எஸ் மூலம் முடிவைப் பெறுவது எப்படி
ஐ.எஸ்.சி தேர்வு முடிவுகளைப் பெற மாணவர்கள் தங்கள் ஏழு இலக்க ரோல் எண்ணை 09248082883 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.


இணையதளத்தில் இருந்து முடிவுகளை எவ்வாறு சரிபார்க்கலாம்


* முதலில், results.cisce.org என்ற போர்டின் அதிகாரப்பூர்வ தளத்தில் கிளிக் செய்யவும்.
* இந்த இணையத்தில் கிளிக் செய்தால், இணையதளத்தின் முகப்புப்பக்கம் திறக்கும். இங்கே தேவையான தகவலை உள்ளிடவும்.
* அதன் பிறகு தகவலை சமர்ப்பிக்கவும். தகவலைச் சமர்ப்பித்த பிறகு, முடிவு திரையில் தோன்றும்.


மேலும் படிக்க | CBSE Class 12 Result 2022: டாப் 3 இடங்களில் தென் இந்திய மண்டலங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ