Board Exam 2021, சென்னை: சிபிஎஸ்இ +2 தேர்வுகள் நடத்துவது குறித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்ட பிறகு, தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த முடிவு எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) தெரிவித்திருந்தார். இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் கொரோனா தொற்று (Coronavirus) பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், மாணவ-மாணவிகளின் நலன் தான் முக்கியம். மிகவும் நெருக்கடியான இந்த கால கட்டத்தில், மாணவர்கள் தேர்வுகளை எழுதி நிர்பந்திக்கப்படக் கூடாது எனத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி +2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்புக்கான தேர்வுகள் (Tamil Nadu Board Exam 2021 class 12) ஒத்தி வைக்கப்படுமே தவிர ரத்து செய்யப்படாது என அமைச்சர் அன்பில் மகேஷ் சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். தற்போது மத்திய அரசின் முடிவை அடுத்து, தமிழகத்திலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு (+2 Board Exam 2021)  நடத்துவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.


ALSO READ | CBSE 12ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு


இந்த நிலையில், தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்புக்கான  பொதுத்தேர்வு நடத்துவதா, இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தவுள்ளார். அதன் பிறகு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் (TN Chief Minister M. K. Stalin) உடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.


எனவே தமிழ் நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு (tamil nadu state board exam 2021) நடத்துவது குறித்து, நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.


ALSO READ |  12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது நடக்கும்? பதிலளித்தார் தமிழக கல்வி அமைச்சர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR