NEET தேர்வை விட அதிக சர்ச்சைகள் நிறைந்த CTET தேர்வு...
நாடுமுழுவதும் நடைப்பெற்ற CTET தேர்வு, NEET தேர்வினை விடவும் அதிகளவு சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
நாடுமுழுவதும் நடைப்பெற்ற CTET தேர்வு, NEET தேர்வினை விடவும் அதிகளவு சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
CBSE CTET தேர்வு ஆனது டிசம்பர் 8-ஆம் தேதி இந்தியாவின் பல்வேறு (110 நகரங்களில்) நகரங்களில் நடைப்பெற்றது. இந்திய பள்ளிகளில் முதன்மை அல்லது தொடக்க நிலை ஆசிரியர்களாக நியமிக்க தகுதி பெற இந்த ஆண்டு 28 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் CTET தேர்வில் பங்கேற்றனர்.
கற்பித்தல் வேலையைப் பெற விரும்பும் ஆர்வமுள்ள தேர்வாளர்கள் CTET தகுதிச் சான்றிதழைப் பெறும் வரை தேர்வு எழுதுதல் காட்டாயமாகிறது, இது KVS/NVS/DSSSB Teachers/பிறர் வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகளில் ஒன்றாகும். இதுபோன்ற ஒரு முக்கியமான தேர்வு இன்று (டிசம்பர் 8-ஆம் தேதி) நாடுமுழுவதும் 110 தேர்வு மையங்களில் நடத்தத்தப்பட்டது.
CTET டிசம்பர் தேர்வு ஆனது ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு மாற்றங்களில் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஷிப்ட் 1 CTET பேப்பர் -1 (வகுப்பு I-V ஆசிரியர்கள்) மற்றும் ஷிப்ட் 2 CTET பேப்பர் -2 (வகுப்பு VI-VIII ஆசிரியர்கள்)-க்காக நடத்தப்படுகிறது.
குறித்த இந்த தேர்வுக்கு தேர்வாளர்களுக்கான தேர்வு மையங்கள் வெகு தூரங்களில் அமைக்கப்பட்டதாக தேர்வாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறித்த இந்த இடையவேளியில் நடத்தப்படும் இந்த தேர்வில் பங்கேற்க தாங்கள் நெடுந்தூரம் பயணித்து வருதல் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும், இதன் காரணமாக தங்களது தேர்வில் தங்களால் கவனம் செலுத்த இயலவில்லை எனவும் தேர்வாளர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நெடும் தொளைவில் இருந்து வருவதால் தங்களால் சரியான நேரத்திற்கு தேர்வு மையத்தை அடைய முடியவில்லை எனவும், தேர்வு எழுதமுடியாமல் வாய்ப்பினை தவறவிட்டதாகவும் சிலர் தேர்வு ஆணையத்தை சாடியுள்ளனர்.
இந்நிலையில் சண்டீகரின் சிஷு நிகேத்தன் மேந்நிலை பள்ளியில் தேர்வு செய்த சென்று, தேர்வாளர் ஒருவர் தெரிவிக்கையில்., "பல காத்திருப்பிற்கு பின்னர் இன்று தேர்வு எழுத வந்தேன்., ஆனால் எனது இருப்பிடத்தில் இருந்து தேர்வு மையம் நெடும் தூரத்தில் இருந்ததால் என்னால் குறித்த நேரத்தில் தேர்வு மையத்தினை அடைய முடியவில்லை. 9.30 மணி தேர்விற்கு நான் 9.25 மணியளவில் தேர்வு மையத்தினை அடைந்தேன், எனினும் குறித்த பள்ளி நிர்வாகம் என்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. தேர்வு மையத்தினை 08.00 மணியளவில் அடைந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டனர். தேர்வாளர்கள் இந்த விதிமுறையில் சில திருத்தங்களை கொண்டு வர வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்., குறித்த இந்த பள்ளியில் மட்டுமே தேர்வாளர்களை பள்ளி நிர்வாகம் தடுத்து நிறுத்தியதாகவும், அருகில் இருந்த அரசு பள்ளியில் 9.30 மணி வரையிலும் தேர்வாளர்கள் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேர்வு ஆணையம் தெரிவிக்கையில்., ‘பரீட்சை மையத்தில் அடையும் நேரம், மையத்திற்கு என்ன கொண்டு செல்ல வேண்டும், பின்பற்ற வேண்டிய ஆடைக் குறியீடு ஆகியவை, தேர்வின் போது பின்பற்றப்பட வேண்டிய தீர்மாங்கள் மற்றும் பிற விவரங்களை தேர்வு நுழைவு சீட்டில் குறிப்பிட்டுள்ளோம். தேர்வாளர்கள் இந்த குறிப்புகளை கொண்டு தங்களை தயார் படுத்திக்கொள்ளுதல் அவசியம்" என குறிப்பிட்டுள்ளனர்.