கொரோனா பரவல் காரணமாக பல விஷயங்கள் தாமதமாகியுள்ளன. எனினும், தமிழ்நாட்டில் பல நிகர்நிலை  பல்கலைக்கழகங்கள்(டீம்ட் யூனிவர்ஸிட்டி) மாணவர்கள்  சேர்க்கை செயல்முறையை கிட்டட்தட்ட நிறைவு பெற்று, மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி விட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DoTE) மூலம் பொறியியல் கல்விக்கான மாணவர் சேர்க்கைக்காக லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள். ஏனெனில் இதற்கான தேர்வான மாணவர்கள் பட்டியல் வெளியீடு செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், கவுன்சிலிங் மேலும் தாமதமாகும்.


கொரோனா (Corona) நெருக்கடி இருந்த நிலையிலும், ஆன்லைன் பதிவு, விண்ணப்பங்களை நிரப்புதல், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றுதல், போன்ற சேர்க்கை செயல்முறையின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தடையினறி நடந்தன. முதலில், செப்டம்பர் 7 ஆம் தேதி மாணவர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், செப்டம்பர் 17 முதல் கவுன்சிலிங் தொடங்கும் என்றும் இயக்குநரகம் அறிவித்திருந்தது. 


மேலும் படிக்க | அக்டோபர் 5 வரை பள்ளிகள் திறக்கப்படாது... ஆன்லைன் வகுப்பு மட்டும் நடைபெறும்: Govt


இருப்பினும், தகுதிபெற்ற மாணவர்கள் பட்டியலை வெளியிடுவது இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது, முதலில் செப்டம்பர் 17 என கூறப்பட்டது . இப்போது பின்னர் செப்டம்பர் 25ம் தேதி மாணவர் பட்டியல் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.


DoTE , தனது சமீபத்திய அறிவிப்பில் கவுன்சிலிங் தேதி பற்றி குறிப்பிடவில்லை என்பதால்,  நிகர் நிலை பல்கலைகழகங்களில் சேராமல் இருக்கும் மாணவர்கள் இன்னும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


தற்போது வரை அசல் சான்றிதழ்களைப் பதிவேற்ற முடியாத மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து தகுதி பெற்ற மாணவர்கள் பட்டியல் வெளியீடு செப்டம்பர் 25 க்கு ஒத்திவைக்கப்பட்டதாக கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | தனியாரால் புறக்கணிக்கப்படும் வட சென்னைவாசிகள், ஆபத்பாந்தவனாகும் BSNL..!!!


தகுதி பட்டியலை வெளியிடுவதில் தாமதம் இருப்பதால் சேர்க்கை செயல்முறை இன்னும் ஒரு மாதம் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார். முன்னதாக, அக்டோபர் 15 ஆம் தேதிக்குள்  கவுன்சிலிங் முடிக்க திட்டமிடப்பட்டிருந்து. இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது