நீட் முதுநிலை 2022 கவுன்சிலிங் : முதல் சுற்று முடிவுகள் வெளியீடு - எப்படி பார்ப்பது?
Tamil Nadu NEET PG Counselling 2022: தமிழ்நாட்டின் நீட் முதுநிலை 2022 கவுன்சிலிங்கின் முதல் சுற்று, சீட் ஒதுக்கீடு பட்டியலை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ளது.
Tamil Nadu NEET PG Counselling 2022: மருத்துவ கலந்தாய்வு குழு (MCC), நடப்பாண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வின் முதுநிலை படிப்புக்கான (NEET PG) கவுன்சிலிங் இறுதி சீட் ஒதுக்கீட்டை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் முதுகலை படிப்புக்கான கவுன்சிலிங்கின் முதல் சுற்றில், அரசு ஒதுக்கீட்டுக்கான தற்காலிக சீட் ஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த, நீட் முதுநிலை 2022 முதல் சுற்றுக்கான, தற்காலிக சீட் ஒதுக்கீடு பட்டியல், மருத்துவக்க கல்வி இயக்குநரகத்தின் (DME) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (tnmedicalselection.net) வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | 6 மணி நேரம் பார்த்தால் போதும்... விமான நிலையத்தில் செம வேலை
விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்பப் பதிவு எண், அவர் சார்ந்த சமூகம், அவரின் மருத்துவ சேவை விவரங்கள், மொத்த மதிப்பெண்கள், ரேங்க் மற்றும் ஒதுக்கப்பட்ட கல்லூரி ஆகியவை அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு நீட் முதுநிலை, முதல் சுற்றில், சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்கள், கல்விக் கட்டணத்தைச் செலுத்தி, தற்காலிக சீட் ஒதுக்கீட்டு உத்தரவைப் பதிவிறக்கம் செய்து, அக்டோபர் 12ஆம் தேதிக்கு, முன் ஒதுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நீட் முதுநிலை கவுன்சிலிங் ஒதுக்கீடு பார்க்கும் வழிமுறைகள்
Step 1: மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் tnmedicalselection.net
Step 2: அந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இருக்கும், தமிழ்நாடு நீட் முதுநிலை படிப்புக்கான சீட் ஒதுக்கீடு முடிவுகள் 2022 லின்க்-ஐ கிளிக் செய்யவும்.
Step 3: உள் நுழைவிற்கு (Login) கேட்கப்படும் தகவல்களை உள்ளீடு செய்தபின், SUBMIT கொடுக்கவும்.
Step 4: தமிழ்நாடு நீட் முதுகலை படிப்புக்கான சீட் ஒதுக்கீடு பட்டியல் காட்டப்படும்.
Step 5: பட்டியலை பதிவிறக்கம் செய்து, சீட் ஒதுக்கீடு முடிவின் பட்டியலின் நகலை எடுத்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க | ONGCயில் 871 பணிகள் காலியாக உள்ளன! விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ