கேரளாவில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் வெள்ளிக்கிழமை, திருவனந்த புரத்தில்  நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களில் ஒரு பகுதியினருக்கும் சில நிபந்தனைகளுடன் வகுப்புகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவிட்-19 (COVID-19) நெறிமுறையை கடுமையாக பின்பற்றி மார்ச் 17 முதல் 30 வரை எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் டூ தேர்வுகளை நடத்தவும் கூட்டம் முடிவு செய்தது.


பொதுத் தேர்வுகளின் போது, நடத்தப்படவுள்ள நடைமுறைத் தேர்வுகளுக்குத் (practical exams) தயாராகும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜனவரி 1 முதல் நடைபெறும்.


10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், தங்களுக்கு உள்ள சந்தேகங்களை போக்கிக் கொள்ள உதவும் வகையில் ஜனவரி 1 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். இது இந்த ஆண்டு ஜூன் முதல் நடத்தப்பட்ட ஆன்லைன் வகுப்புகளில், கற்றுக் கொடுத்த விஷயங்களின் தொடர்ச்சியாக இந்த வகுப்புகள் இருக்கும். இருப்பினும், பள்ளிகளில் நடக்க உள்ள இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவர்கள் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.


10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான மாதிரி தேர்வுகளும், மாணவர்களுக்கான கவுன்சிலிங்கும் நடத்தப்படும்.


ALSO READ | 55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- வங்க தேசம் இடையிலான ரயில் சேவை தொடக்கம்...!!


கல்லூரிகள் (Colleges) மற்றும் பல்கலைக்கழகங்களில் வகுப்புகள்


உயர்மட்டக் கூட்டத்தில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் முதுகலை மாணவர்களுக்கான வகுப்புகளைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு வகுப்பில் பாதி மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். வகுப்புகளை காலை மற்றும் பிற்பகலில் ஷிப்டுகளில் நடத்தலாம்.


வேளாண் மற்றும் மீன் துறை பல்கலைக்கழகங்களுக்கான வகுப்புகளும் ஜனவரி 1 முதல்  தொடங்கப்படும். வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை முறைப்படுத்திய பின்னர் வகுப்புகள் தொடங்கும்.மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை, இரண்டாம் ஆண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையில் உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கும்.


மாநில அமைச்சர்கள் கே.கே.ஷைலாஜா, சி.ரவீந்திரநாத், கே.டி.ஜலீல், வி.எஸ்.சுனில்குமார், ஜே மெர்சிகுட்டி அம்மா, பொதுக் கல்விச் செயலாளர் ஏ ஷாஜகான், உயர்கல்வி செயலாளர் உஷா டைட்டஸ், சுகாதார செயலாளர் ராஜன் கோப்ராகடே ஆகியோரும் உயர் மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


ALSO READ | ஆந்திராவின் எலூருவில் ஏற்பட்ட மர்ம நோயின் மர்மம் நீங்கியது: விவரம் உள்ளே


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR